திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் கூட்டம் தொடங்கியது.!
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் கூட்டம் தொடங்கியது.
திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று அறிக்கை வெளியிட்டுருந்தார். இந்த கூட்டம் காணொளி வாயிலாக நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், அந்த அறிக்கையில், மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் அனைவரும் தவறாமல் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.
இதனிடையே, பெரும்பாலான எக்ஸிட் போல் கணிப்புகள் திமுக வெற்றி பெறும் என்று கூறியுள்ள நிலையில், முக ஸ்டாலின் தலைமையில் திமுக வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.