கொரோனா பரவலால் ரூ.7400 கோடியை சேமித்த கூகுள்…!

Default Image

கொரோனா தொற்றின் காரணமாக ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதால்,கூகுள் நிறுவனம் ரூ.7400 கோடியை சேமித்துள்ளதாகக் கூறியுள்ளது.

கொரோனா தொற்றானது ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிப்பதால், பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதித்துள்ளன.இருப்பினும்,இதற்குப் பின்னால் லாபகரமான திட்டங்கள் உள்ளன.

ஏனெனில்,ஒரு இடத்தில் நிறுவனம் அமைத்து அந்த இடத்திற்கு வாடகை கொடுக்க தேவையில்லை. மேலும்,மின்சாரக் கட்டணம் மற்றும் ஊழியர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்ட இதர அடிப்படை வசதிகளுக்கு பணம் செலவு செய்ய தேவையில்லை.எனவே,ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதால் நிருவனங்களுக்கு கூடுதல் லாபமே கிடைக்கின்றன.

அந்த வரிசையில்,கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட கூகுள் நிறுவனம்,தங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதால் ஏராளமான பணத்தை சேமித்துள்ளதாக ‘ப்ளூம்பெர்க்’ செய்தி இதழில் தெரிவித்துள்ளது.

அதன்படி,கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு உணவு கொடுப்பது,மசாஜ் செய்து கொள்ளுதல் மற்றும் சொந்த விருப்பங்கள் போன்றவற்றிருக்கு சில சலுகைகளை வழங்குகிறது.ஆனால்,கொரோனா தொற்றின் காரணமாக ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதால் அவை அனைத்தும் கடந்த ஒரு வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால்,கூகுள் நிறுவனம் அதிக அளவிலான பணத்தை சேமித்துள்ளது.

மேலும் கூகுள்,அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் விளம்பரங்கள், பயணம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றின் செலவுகளையும் குறைத்து முதல் காலாண்டில் 268 மில்லியன் டாலர்களை (சுமார் ரூ.1,987 கோடி)சேமித்துள்ளது.

மேற்கண்ட இத்தகைய காரணங்களால்,தற்போது கூகுள் நிறுவனத்தின் ஆண்டு சேமிப்பு 1 பில்லியன் டாலராக (தோராயமாக ரூ. 7,400 கோடி) உள்ளது.இதனால்,கூகுள் நிறுவனத்தின் வருவாய் 34% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
arrest
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review
Su Venkatesan MP
Court - Nellai