கொரோனா நோயாளிகள் படுக்கை பெற புதிய வசதி அறிமுகம்..!

Default Image

தமிழக சுகாதாரத்துறை கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி பெற ட்விட்டர் கணக்கு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால், பல மருத்துவமனைகளில் படுக்கை வசதியுடன் கூடிய ஆக்சிஜன் இடம் இல்லாததால் பல நோயாளிகள் படுக்கை வசதியுடன் ஆக்சிஜன் எங்கு கிடைக்கும் என  சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி பெற ட்விட்டர் கணக்கு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. @1O4GoTN என்ற ட்விட்டர் கணக்கு மூலம் படுக்கை வசதியை கோரலாம். கொரோனா நோயாளிகளின் கோரிக்கை கையாள ஒருங்கிணைந்த  கட்டளை மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் படுக்கை மேலாண்மையை இணையம் வழியாக கட்டளை மையம் கண்காணித்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கட்டளை மையம் படுக்கை வசதியுடன் ஆக்சிஜன் கிடைப்பதையும் உறுதிசெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் வசதியை பிரபலப்படுத்த #BedsForTN என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்