அதிகப்படியாக தடுப்பூசிகளை வீணடித்த மாநிலங்களின் பட்டியல் வெளியீடு!
இந்தியாவிலேயே எந்தெந்த மாநிலங்களில் அதிக அளவில் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புதிதாக தினமும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அதிகரித்துவரும் கொரோனாவை ஒழிப்பதற்காக மத்திய அரசாங்கம் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டும் கொண்டிருக்கின்றனவாம்.
எந்த மாநிலத்தில் தடுப்பூசிகள் அதிக அளவில் வீணடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த கணக்கீடு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதிக அளவில் இதுவரை லட்சத்தீவில் தான் கொரோனா தடுப்பூசி அதிகமாக வீணடிக்கப்பட்டுள்ளது. இலவசமாக மத்திய அரசாங்கம் கொடுத்த 45,710 தடுப்பூசிகளில் 9.76% வீணாக்கப்பட்டு முதலிடத்தில் லட்சத்தீவு உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகம் 8.83%, அசாம் 7.70%, மணிப்பூர் 7.44%, ஹரியானா 5.72%, தாத்ரா & நகர் ஹவேலி 4.99%, பஞ்சாப் 4.98%, பீகார் 4.95%, நாகலாந்து 4.13%, மேகாலயா 4.01% தடுப்பூசிகளை வீணடித்துள்ளதாம்.