எகிப்திய மம்மி ஒரு கர்ப்பிணி பெண்ணா…! 28 வார கர்ப்பம் ,ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்…!

Default Image

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட  மம்மி ஒரு கர்ப்பிணி பெண், ஆண் பாதிரியார் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

போலந்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு பண்டைய எகிப்திய மம்மியை ஆராய்ச்சி செய்த்துள்ளனர்.அந்த ஆராய்ச்சியில் எக்ஸ்-கதிர்கள் மற்றும் கணினி சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின் வெளிவந்த தகவல் பெரும் ஆச்சிரியம் கலந்த அதிர்ச்சியை அவர்களுக்கு தந்துள்ளது.

ஏன்னென்றால்,இந்த பண்டைய எகிப்திய மம்மி ஒரு ஆண் பாதிரியார் என்று எதிர்பார்த்த நிலையில் அது ஒரு பெண் என்றும் அதிலும் அவர் கர்ப்பிணியாக இருந்தார் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் இதுதான் உலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளில் நன்கு பாதுகாக்கப்பட்ட ஒரு கர்ப்பிணி பெண் மம்மி என்று கூறினர்.

போலந்து தலைநகர் வார்சாவில் 1826 இல் இந்த மம்மி கொண்டுவரப்பட்டுள்ளது  என்றும் அந்த கல்வெட்டில் இது ஒரு ஆண் பாதிரியார் என்றும் இருந்துள்ளது.  தற்போது, அது ஆண் இல்லை என்பதை நிரூபித்துள்ளனர்.

ஏன்னென்றால், அதில் ஆண்குறி இல்லை எனவும் அதற்கு பதிலாக மார்பகங்களும், நீண்ட கூந்தலும் இருந்தது எனவும் மேலும் அது ஒரு கர்ப்பிணி பெண் என்றும் மானுடவியலாளரும் தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான மார்செனா தெரிவித்துள்ளார்.

அதில் அவர், சிறிய பாதத்தையும் சிறிய கருவையும் பார்த்தோம்.மேலும்,அந்த மம்மியின் வயது 20 முதல் 30 இருக்கும் என்றும் கணித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். அந்த கருவில் இருந்த மண்டையோட்டின் அளவு 26 முதல் 28 வாரங்கள் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

mummy

வார்சா மம்மி திட்டத்திலிருந்து ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு மற்றும் வார்சாவின் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள பிற மம்மிகள் பற்றிய பல ஆண்டு சோதனைகள் இந்த வாரம் தொல்பொருள் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டன.  மேலும், போலந்து அகாடமி ஆப் சயின்ஸின் குழு உறுப்பினர் வோஜ்சீச் எஜ்மண்ட் ஏ.பி இது எங்களின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு மற்றும் ஆச்சர்யம் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்