டெல்லி மக்கள் யாரவது டெல்லி பாஜக உறுப்பினர்கள் யாரையாவது பார்த்தீர்களா? – ராஜீவ் துலி

டெல்லி நகரமே மயான காட்சியளிக்கிறது. டெல்லி மக்கள் யாரவது டெல்லி பாஜக உறுப்பினர்கள் யாரையாவது பார்த்தீர்களா? பாஜக ஃபார் டெல்லி எங்கே?
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த வைராஸால் தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 3.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிற நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் செய்வதற்கு கூட இடம் இல்லாத சூழல் காணப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள் குறித்து, ராஜீவ் துலி ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில், ‘டெல்லி நகரமே மயான காட்சியளிக்கிறது. டெல்லி மக்கள் யாரவது டெல்லி பாஜக உறுப்பினர்கள் யாரையாவது பார்த்தீர்களா? பாஜக ஃபார் டெல்லி எங்கே? மாநில நிர்வாகிகள் தொலைந்து விட்டார்களா?’ என்று பதிவிட்டுள்ளார்.