IPL 2018:இந்த வருட ஐபிஎல் போட்டிகளுக்கு ஏக,போக வரவேற்ப்பு!வரலாறு காணாத பார்வையாளர்களை ஈர்த்த ஐபிஎல்!ஒரே வாரத்தில் எண்ணிக்கை எவ்ளோ தெரியுமா?
371 மில்லியன்,நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் வார தொலைக்காட்சி, ஆன்லைன் பார்வையாளர்கள் எண்ணிக்கை என்று தெரியவந்துள்ளது. இது ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத அதிகபட்ச வரவேற்பாகும்.
முதல்வாரத்தில் தொலைக்காட்சியில் 288.4 மில்லியன் மக்களும் ஹாட்ஸ்டார் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்க்கில் 82.4 மில்லியன் மக்களும் பார்வையிட்டுள்ளனர்
“ஐபிஎல் தொடங்கிய காலத்திலிருந்து முதல் வாரத்தில் இந்த அளவுக்கு அதிகபட்ச பார்வையாளர்கள் இருந்ததில்லை” என்று ஸ்டார் இந்தியா தெரிவித்துள்ளது
குறிப்பாக தெற்கில் 30% பார்வையாளர்கள் அதிகரித்துள்ளனர். இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காள மொழிகளில் ஹாட்ஸ்டார் லைவ் ரிலே செய்து வருகிறது
தொடக்கம்தான் என்றாலும் இதுவரை ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு இல்லாத வரவேற்பு இந்த ஐபிஎல் போட்டிக்குக் கிடைத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.