#Breaking: மேற்குவங்கத்தில் தொடருமா மம்தா ஆட்சி? வெளியானது கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Default Image

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சி தொடரும் என்று டைம்ஸ் நவ் – சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை பிரபல ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. அந்தவகையில், மேற்கு வங்கம் மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் 8-ம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று முடிவடைந்த நிலையில், மேற்குவங்கத்தில் கருத்துக்கணிப்பு  முடிவுகள் வெளியானது. அதன்படி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சி தொடரும் என்று டைம்ஸ் நவ் – சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பை ரிபப்ளிக் டிவி – சிஎன்எக்ஸ் மற்றும் ஏபிபி – சிவோட்டர் நடத்தி வெளியிட்டுள்ளது.

ரிபப்ளிக் டிவி – சிஎன்எக்ஸ் முடிவு: 

திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி: 128-138

பாஜக கூட்டணி: 138-148

சிபிஎம் கூட்டணி: 11-21 இடங்கள் வரை வெற்றிபெறும்.

டைம்ஸ் நவ்- சி வோட்டர்:

திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி: 152-164

பாஜக கூட்டணி: 109-121

சிபிஎம் கூட்டணி: 14-25 இடங்கள் வரை வெற்றிபெறும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்