மாநில அரசுகளை குறை கூறும் மோடி…! பேரழிவை தவிர்க்காவிட்டால் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் – சீதாராம் யெச்சூரி

Default Image

பிரதமர் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும். முடியாவிட்டால் பதவி விலக வேண்டும் என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் மோடியும் அவரது அரசும் கொரோனா பேரழிவை ஏற்படுத்திய குற்றத்திற்கு மற்றவர்கள் மீது பழியை சுமத்திவிட்டு தப்பியோட முடியாது முதலில் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்கவில்லை என பழியை போட்ட மோடி பின்னர் மாநில அரசுகளை குறை கூற தொடங்கி விட்டார்.

தற்போது பிரதமர் மோடி கட்டுப்படுத்த முடியாத கொரோனா வைரஸின் மரபணு மாற்றத்தை குறை கூற தொடங்கி உள்ளார். அனைத்து வைரஸும் மரபணு மாற்றத்தை பெறும். ஆனால், சாதகமான சூழ்நிலை நிலவினால் அது உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறும்.அறிவியலுக்கு புறம்பான முறையில் பெரும் கூட்டங்களை நடத்தி கொரோனாவை பிரதமர் மோடி பரப்பியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடி எந்த திட்டமும் இல்லாமல் தற்பெருமை பேசி ஒரு வருட காலத்தை வீணடித்து விட்டார் என கூறியுள்ள அவர் மக்களுக்கு தேவையான ஆக்ஸிஜன், படுக்கைகள், தடுப்பூசி ஆகியவற்றை அளித்து மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும். முடியாவிட்டால் பதவி விலக வேண்டும் என அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்