சடலங்களை வைத்து அரசியல் செய்யும் பாஜக அரசு – முன்னாள் முதல்வர் கமல்நாத் கடும் விமர்சனம்!

Default Image

கொரோனா 2வது அலைகளை மாநில அரசு முன்கூட்டியே கவனித்திருக்க வேண்டும் என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் கடும் விமர்சனம்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத், மத்திய பிரதேசத்தில் கொரோனா இறப்புகள் குறித்து குறைவான எண்ணிக்கையை அறிக்கையில் அளித்திருப்பதாக ஆளும் அரசு மீது குற்றம் சாட்டினார். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மாநில அரசு மறுத்துள்ளது.

கொரோனா நெருக்கடியை பாஜக அரசு தவறாக நிர்வகிப்பதாக இது நிர்வாகத்தின் குற்றவியல் அலட்சியம் என்று குறிப்பிட்டார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், தடுப்பூசி மருந்து, ஆக்ஸிஜன் மற்றும் ஆம்புலன்ஸ்கள் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த வசதிகள் அனைத்தும் கிடைக்கக்கூடிய ஒரே ஒரு மருத்துவமனை பற்றி முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடமிருந்து நான் அறிய விரும்புகிறேன் என்றும் இது நிர்வாக அலட்சியம் எனவும் விமர்சித்துள்ளார். கொரோனா 2வது அலைகளை மாநில அரசு முன்கூட்டியே கவனித்திருக்க வேண்டும். ஆனால், அதை தவறிவிட்டது.

கொரோனா 2வது அலை குறித்து 3 மாதங்களுக்கு முன்னரே எச்சரித்தும் அதனை கண்டுகொள்லாமல் பாஜக அரசு இப்போது சடலங்களை வைத்து அரசியல் செய்கிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார். மாநிலத்தில் ஏற்படும் உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கை மறைக்கப்படுவதாகவும், அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை விட இந்த புள்ளிவிவரங்கள் மிக அதிகம் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு, எம்.பி. உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா மாநிலத்தில் இறப்புகளை குறைத்து மதிப்பிடவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, கொரோனா வைரஸ் பரவல் கிராமங்களுக்குள் நுழைந்ததாகவும், அங்கு சோதனை வசதிகள் எதுவும் இல்லை என்றும் கமல்நாத் கூறினார்.

மேலும், கிராமங்களில் சோதனைகள் நடத்தப்படவில்லை, அப்படி செய்தலும், மூன்று நாட்களில் கூட அறிக்கைகள் அறிவிக்கப்படவில்லை என குற்றசாட்டினார். இதனால் தொற்றுநோய் வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது என்றும் ரெம்டெசிவிர் மருந்து, பாஜக தலைவர்களால் “தங்கள் சொந்த மக்களுக்கு” வழங்கப்படுவதாகவும், மாநிலத்தில் தடுப்பூசிகள் கூட கிடைக்கவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்