தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் உயிருடன் எழுந்த பெண்…!

Default Image

சத்தீஸ்கரில் 72 வயதான லட்சுமி பாய் என்ற பெண், பீம்ராவ் அம்பேத்கர் மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பெண் அவரை தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் 72 வயதான லட்சுமி பாய் என்ற பெண், பீம்ராவ் அம்பேத்கர் மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பெண் அவரை தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து உயிர் இருப்பதை கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் ஆம்புலன்சில்  மருத்துவர்கள் அந்த பெண்ணை மருத்துவமனை கொண்டு சென்றனர்.

மருத்துவமனை அருகே சென்றபோது பெண் மயக்கம் அடைந்துள்ளார்.  இதனையடுத்து அப்பெண் உயிரணுக்கள் பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு கொரோனா எதிர்மறை என தெரிவித்துள்ளனர். உயிரணுக்களில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக  தான் அப்பெண் மருத்துவரால் இறந்ததாக அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை எடுத்து பாயின் பேத்தி சத்தீஸ்கரில் உள்ள கோவிட் பராமரிப்பு மையத்தில் பணியாளராக பணிபுரிகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், இறந்த பெண்ணை கோபல்நகர் மயானத்திற்கு கொண்டு சென்றோம்.  உடல் குளிர்ச்சியாக இல்லாததனால், குடும்பத்தினர் தகனம் செய்வதற்கு முன்பாக காத்திருக்க முடிவு செய்தனர்.

சந்தேகமடைந்த நிதி அவசரமாக ஒரு மருத்துவரை பரிசோதனைக்காக அழைத்தார். அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் உயிருடன் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவருக்கு 85 சதவீதம் ஆக்சிஜன் அளவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்