மேற்கு வங்கத்தின் முன்னாள் அமைச்சர் உபேன் பிஸ்வாஸ் ராஜினாமா..!
மேற்கு வங்கத்தின் முன்னாள் அமைச்சரும், சிபிஐ முன்னாள் இயக்குநருமான உபேன் பிஸ்வாஸ் நேற்று திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகினார்.
அவர் “தனிப்பட்ட காரணங்களுக்காக” விலகுவதாகவும், வேறு எந்த அரசியல் கட்சியுடனும் இணைய விரும்பவில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். “எனது முடிவை கட்சியின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன். எட்டு கட்ட தேர்தல்களுக்கு முன்னதாக நான் விலகுகிறேன். ஏனென்றால் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் கட்சியை விட்டு வெளியேறுவதாக யாரும் குற்றம் சாட்டுவதை நான் விரும்பவில்லை என்று அவர் கூறினார்.
2010-ல் மம்தா பானர்ஜியின் வேண்டுகோளின் பேரில் திரிணாமுல் காங்கிரஸில் பிஸ்வாஸ் சேர்ந்து 2011 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், 2016 தேர்தலில் தோல்வியடைந்தார். தொடர்ந்து பானர்ஜியுடன் நல்ல உறவைக் கொண்டிருப்பேன் எனவும் அவர் இப்போது பிஸியாக இருப்பதால் ராஜினாமா செய்வதற்கு முன்பு அவரிடம் என்னால் பேச முடியவில்லை என பிஸ்வாஸ் தெரிவித்தார்.