மனீஷ் பாண்டே , வார்னர் அதிரடி.., 172 ரன்கள் சென்னைக்கு இலக்கு..!

Default Image

ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர்.

ஐபிஎல் தொடரில் இன்று 23-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர்,
ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர். ஆனால் வழக்கம்போல ஆட்டம் தொடக்கத்திலே ஜானி பேர்ஸ்டோவ் தனது விக்கெட்டை இழந்தார். 7 ரன்னில் சாம் கரண் வீசிய பந்தை சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தபோது தீபக்  சாஹரிடம் கேட்சை கொடுத்தார்.

அடுத்து மனீஷ் பாண்டே களமிறங்கினர். பின்னர், மனீஷ் பாண்டே , டேவிட் வார்னர் இருவரும் கூட்டணி அமைத்தனர். அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினர். இவர்கள் இருவரின் கூட்டணியை பிரிக்கமுடியாமல் இருந்தபோது  லுங்கி நிகிடி ஓவரில் டேவிட் வார்னர் ஜடேஜாவிடமும் , மனீஷ் பாண்டே டு பிளெசிஸிடம் விக்கெட்டை கொடுத்தனர்.

டேவிட் வார்னர் 57, மனீஷ் பாண்டே 61 ரன்கள் எடுத்தனர். டேவிட் வார்னர் இப்போட்டியில் அரைசதம் அடித்த நிலையில், இதுவரை டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் 50 அரைசதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசி 26* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.

இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். 172 ரன்கள் இலக்குடன் சென்னை அணி களமிறங்கவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்