#IPL2021: 5,000 ரன்களை கடந்த 3-வது வீரர்.. டி வில்லியர்ஸ் சாதனை!

Default Image

ஐபிஎல் தொடரில் 5,000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற சாதனையை பெங்களூர் அணியின் அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் படைத்தார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 22-ம் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி அணி இறுதிவரை போராடிய நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்கள் எடுத்து, 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணி திகில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பெங்களூர் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.

இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய டி வில்லியர்ஸ், 42 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர் உட்பட 75 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் 12 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் தொடரில் 5,000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற சாதனையை படைப்பார் என்று கூறப்பட்டுள்ள நிலையில், 12 ரன்களை அடித்து, 5,000 ரன்களை கடந்த 2-ம் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார். அதிகமான 5,000 ரன்களை கடந்த பட்டியலில் முதலிடத்தில் டேவிட் வார்னரும், இரண்டாம் இடத்தில் விராட் கோலியும் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
atlee and loki
Tamilnadu CM MK Stalin - VCK Leader Thirumavalavan
ind vs aus border gavaskar trophy
sleeping position (1)
Erumbeeswarar (1)
Tungsten mining