கொரோனா மையம் தொடங்க அனுமதிபெற தேவையில்லை- சென்னை மாநகராட்சி அறிவிப்பு ..!
சென்னையில் தனியார் விடுதிகள் மற்றும் மருத்துவமனைகள் கொரோனா மையங்களை தொடங்க முன் அனுமதி பெற தேவையில்லை.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 15,830 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 4,640 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் தனியார் விடுதிகள் மற்றும் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளை பராமரிப்பு கொரோனா மையங்களை தொடங்க முன் அனுமதி பெற தேவையில்லை என்றும் தகவல் மட்டும் தெரிவித்தால் போதுமானது என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.
தனியார் விடுதிகள் மற்றும் மருத்துவமனைகள் அமைக்கும் கொரோனா சிகிச்சை மையம் போதிய வசதிகளுடன் அமைக்க வேண்டும் என பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார். கொரோனா சிகிக்சை மையங்களை தனியார் தொடங்கிய பின், jagadeesan.gcc@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பினால் போதும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.