#BREAKING: கொரோனா.., சென்னைக்கு சிறப்பு அதிகாரி நியமனம்..!
சென்னையில் தனியார் மருத்துவமனைகள், கொரோனா மையங்களில் சிகிச்சையை கண்காணிக்க சிறப்பு அதிகாரியாக தரேஸ் அகமது ஐஏஎஸ் நியமனம்.
சென்னை மாநகராட்சியில் உள்ள மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயல்படும் தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் கொரோனா சிகிச்சையை கண்காணிக்க சிறப்பு அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி தரேஸ் அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.