#Corona:தமிழகத்தில் மீண்டும் 15 ஆயிரம் கடந்த கொரோனா 77 பேர் உயிரிழப்பு
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 15,830 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 15,830 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை ஆக 11,13,502 அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 4,640 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
நேற்று மேலும் 77 பேர் உயிரிழந்த நிலையில்,சென்னையில் மட்டும் 27 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 13,728 ஆக உயர்ந்துள்ளது.அதுமட்டுமில்லாமல் நேற்று மட்டும் 14,043 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.இதுவரை தமிழகத்தில் 9,90,919 குணமடைந்து பேர் வீடு திரும்பியுள்ளனர்.