கொரோனா குறித்து ஆஸ்திரேலிய நாளிதழிலின் குற்றச்சாட்டை மறுத்த இந்தியா..!

Default Image

கடந்த சனிக்கிழமையன்று கொரோனா விஷயத்தில் மோடி முறையாகக் கையாளவில்லை என குற்றச்சாட்டுகளை சுமத்தி பிலிப் ஷெர்வெல் என்பவர் எழுதிய கட்டுரையை முதலில் “தி டைம்ஸ்” இணையத்தில்தான் வெளியாகியிருந்தது.

பின்னர், இது ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய ஊடகமான “தி ஆஸ்திரேலியன்” அந்த கட்டுரையின் இணைப்பைத் தமது ட்விட்டரில் பகிர்ந்து ஆணவம், தேசிய வெறி மற்றும் அதிகாரத்துவ இயலாமை ஆகியவை இணைந்து இந்தியாவின் இந்தநிலையை உருவாக்கியுள்ளன என எழுதியிருந்தது.

அந்த கட்டுரையில், மேற்கு வங்கத் தேர்தலுக்கான அசன்சோலில் நடந்த தேர்தல் பேரணியில் “நான் இவ்வளவு பெரிய கூட்டத்தை பார்த்ததில்லை” என்று பிரதமர் மோடி கூறியதன் மூலம் கட்டுரை தொடங்குகிறது. பின்னர் கட்டுரை  ‘கும்பமேளா’ மற்றும் மேற்கு வங்காள தேர்தலுக்காக நடத்தப்பட்ட பெரிய தேர்தல் பேரணிகள் பற்றியும் பேசுகிறது.

மேலும், கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமடைந்த பின்னர் ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பூசிகளின் பற்றாக்குறை மற்றும் மருத்துவமனை உள்கட்டமைப்பின் பற்றாக்குறை, கொரோனா வைரஸ் மாறுபாடு குறித்த நிபுணர்களின் கருத்துக்களைப் புறக்கணித்தல் ஆகியவை இந்தியாவில் நரேந்திர மோடியின் கொள்கைகளால் ஏற்பட்டவை என்று ஒரு கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது.

இந்தக் கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து இந்தியா தரப்பில் எழுதப்பட்ட கடிதத்தில் அந்தக் கட்டுரையில் ஆதாரமற்ற மற்றும் தவறான விஷயங்கள் உள்ளன. இந்தியாவில் கொரோனா பாதுகாப்பு குறித்த ‘சரியான’ தகவலுடன் மற்றொரு கட்டுரையை வெளியிடுமாறும். எதிர்காலத்தில் இதுபோன்ற ஆதாரமற்ற கட்டுரைகளை வெளியிட வேண்டாம் என்றும் இந்தியா “தி ஆஸ்திரேலியன்”  நாளிதழிலிடம் கேட்டுள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த எண்ணற்ற நடவடிக்கைகளை இந்தியா எடுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, உலக நாடுகளுக்கு மருத்துவ உதவிகளை இந்தியா செய்திருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்