இந்தியாவிற்கு உதவ தைவான் தயாராக உள்ளது – அதிபர் சாய் இங்-வென்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுடன் தைவான் துணை நிற்கிறது என்று அந்நாட்டு அதிபர் சாய் இங்-வென் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், தினந்தோறும் 3 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவர் மருந்து, படுக்கை வசதி என மருத்துவம் சார்ந்த உபகரணங்கள் தட்டுப்பாடு நிலவி வருவதால், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரஸின் பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனா 2வது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுடன் தைவான் துணை நிற்கிறது என்று அந்நாட்டு அதிபர் சாய் இங்-வென் தெரிவித்துள்ளார்.
இந்த கடினமான தருணத்தில் இந்தியாவுடன் ஒன்றிணைந்து செயல்படவும், உதவவும் தயாராக இருக்கிறோம் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுபோன்று, கொரோனா ஆரம்ப காலத்தில் இந்தியா அமெரிக்காவிற்கு உதவிகளை செய்திருந்தது. அதுபோலவே, இந்த நேரத்தில் இந்தியாவுக்கு உதவ நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என அதிபர் ஜோ பைடன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
On behalf of all #Taiwanese people, I would like to express my serious concern over the rapid spread of COVID-19 in #India. Taiwan stands with India in this difficult time, & we are ready to provide help.
— 蔡英文 Tsai Ing-wen (@iingwen) April 27, 2021