கொரோனா அச்சம்.., 12 சிறப்பு ரயில்கள் ரத்து- தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

Default Image

கொரோனா காரணமாக 12 சிறப்பு ரயில் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக பயணிகள் வருகை குறைந்ததால் 12 சிறப்பு ரயில் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  • அதன்படி, ராமேஸ்வரம்- குமரி வாரம் மும்முறை சிறப்பு ரயில்கள் சனி, திங்கள் மற்றும் புதன் ஆகிய நாட்களில் மே 1-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.
  • குமரி- ராமேஸ்வரம் வாரம் மும்முறை சிறப்பு ரயில்கள் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் மே 2-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.
  • கோவை – கே.எஸ்.ஆர் பெங்களூர் சிறப்பு ரயில் புதன் தவிர அனைத்து நாட்களிலும் ஏப்ரல் 29-தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.
  • பெங்களூர் -கோவை சிறப்பு ரயில் புதன் தவிர அனைத்து நாட்களிலும் ஏப்ரல் ஏப்ரல் 29-தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.
  • சென்னை சென்ட்ரல்- மைசூர் சதாப்தி சிறப்பு ரயில் புதன் தவிர அனைத்து நாட்களிலும் இரு மார்க்கத்திலும் ஏப்ரல் 29-தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.
  • சென்னை சென்ட்ரல்- கோவை சிறப்பு ரயில் இரு மார்க்கத்திலும் செவ்வாய் தவிர அனைத்து நாட்களிலும் ஏப்ரல் 29 முதல் ரத்து செய்யப்படுகிறது.
  • எர்ணாகுளம்- பனஸ்வாடி வாரம் இருமுறை சிறப்பு ரயில்கள் திங்கள், புதன் கிழமைகளில் மே 3-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.
  • பனஸ்வாடி- எர்ணாகுளம் வாரம் இருமுறை சிறப்பு ரயில்கள் செவ்வாய், வியாழக்கிழமைகளில் மே 4-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்