ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை – டெல்லி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்படும் நோயாளிகள்!

Default Image

ஒரு நாள் முழுவதற்கும் தேவையான அளவிற்கு மேல் ஆக்சிஜன் இருப்பதாக டெல்லி மருத்துவமனைகளில் மீண்டும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக நாளுக்கு நாள் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருந்தாலும், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். கொரோனா தாக்கத்தால் உயிரிழப்பவர்கள் ஒருபுறமிருக்க நோயாளிகள் மருத்துவமனையில் படுக்கையறை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதி இல்லாததால் சிகிச்சை பெற முடியாமல் இறந்துவிடுகின்றனர். பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுக்க முடியாமல் நோயாளிகள் உயிரிழந்த சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக டெல்லியில் இந்த நிலை அதிகமாக இருந்தது.

இதனை அடுத்து டெல்லியில் உள்ள பல மருத்துவமனைகள் தங்கள் மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிப்பதற்கு மறுத்து வந்த நிலையில், தற்போது ஒரு நாள் முழுவதற்கும் தேவையான அளவிற்கு மேல் டெல்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பதால் மீண்டும் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட துவங்கியுள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் டி கே பாலுஜா அவர்கள், தற்போது ஒரு நாளுக்கு தேவையான அளவுக்கு அதிகமாக ஆக்சிஜன் சப்ளை தங்களிடம் இருப்பதாக கூறியுள்ளார்.

தினசரி தங்களுக்கு 3.6 மெட்ரிக் டன் அளவில் ஆக்ஸிஜன் தேவைப்படும், ஆனால் தற்பொழுது ஆறு டன் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தங்களுக்கு ஆக்சிஜன் வழங்கிய இந்திய ரயில்வே மற்றும் டெல்லி அரசுக்கு தங்கள் மருத்துவமனை சார்பில் நன்றியும் தெரிவித்துள்ளார். மேலும் ஒரே இரவில் தங்களுக்கு இந்தியன் ரயில்வே மூலமாக தங்களுக்கு ஆக்சிஜன் வழங்கிய டெல்லி முதல்வருக்கும் தங்கள் நன்றி என தெரிவித்துள்ளார். இந்த மருத்துவமனையில் மட்டுமல்லாமல் பாத்ரா மருத்துவமனை, சர் கங்கா ராம் மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் தற்பொழுது ஆக்சிஜன் போதிய அளவு இருப்பதாகவும் எனவே நோயாளிகளை அனுமதித்த தாங்கள் தயாராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் இயக்குனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்