மகாராஷ்டிராவில் இனி மின்சார அளவீட்டை மக்களே அனுப்பலாம்!
ஊரடங்கு காரணமாக மின்சாரத்திற்கான மீட்டர் கணக்கீட்டை இனி மக்களே மொபைல் மூலமாக அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் மிக தீவிரமாக காணப்படுகிறது. இதன் காரணமாக ஊரடங்கு கடமையாக்கப்பட்டு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருப்பதால் பல இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மாநில மின்சார விநியோக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று மின்சார மீட்டர் அளவை எடுக்க முடியாததால் இனி கடைக்காரர்களும் சரி, மக்களும் சரி தங்கள் வீடுகளில் உள்ள மின்சாரத்திற்கான மீட்டர் அளவுகோலை தாங்களே மொபைலில் புகைப்படம் எடுத்து அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது. எந்த தினத்தில் அளவு எடுக்கவேண்டுமோ அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பதாகவே பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு எஸ்எம்எஸ் ஒன்று அனுப்பப்படும். இந்த எஸ்எம்எஸ் பார்க்கக்கூடிய நுகர்வோர் அந்த நான்கு நாட்களுக்குள் மீட்டர் அளவுகோலை புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டுமாம்.
அதன்பின் யார் பெயரில் மின்சார கட்டண அட்டை உள்ளதோ அவர்கள் நேரில் சென்று இந்த பணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் நேரடியாக மீட்டர் அளவு எடுப்பவர்கள் இனி வீட்டிற்கு வர மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் யார் பெயரில் மின்சார மீட்டர் அளவுகோல் புத்தகம் இருக்கிறதோ அவர்கள் நேரில் செல்ல முடியாவிட்டால் https://www.mahadiscom.in இந்த இணையதளத்தில் பெயர் மாற்றி பதிந்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.