சென்னையில் 32சவரன் நகைகள் கொள்ளை ! தனியாக வாழும் மூதாட்டி வீட்டில் பூட்டை உடைத்து கைவரிசை!
தனியாக வாழும் மூதாட்டி வீட்டில் பூட்டை, சென்னை அபிராமபுரத்தில் உடைத்து 32சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அபிராமபுரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஜானகி என்கிற 75 வயதுப் பெண் தனியாகக் குடியிருந்து வருகிறார்.
2 நாட்களுக்கு முன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்ற இவர், இன்று திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 32சவரன் நகைகள், ஐம்பதாயிரம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளைபோனது தெரியவந்தது.
இது குறித்து ஜானகி அளித்த புகாரின்பேரில் மயிலாப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.