#BREAKING: மே 1 முதல் 50 % பணியாளர்களுடன் உயர் நீதிமன்றம் இயங்கும்..!
50 % பணியாளர்களுடன் மட்டுமே உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை தலைமை அனைத்து பிரிவுகளும் செயல்பட பதிவாளர் தனபால் உத்தரவு.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் நாள்தோறும் 3 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், இந்தியாவில் கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறைக்க மத்திய , மாநில சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்கத்தில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக மே 1 முதல் 50 % பணியாளர்களுடன் மட்டுமே உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையின் அனைத்து பிரிவுகளும் செயல்பட வேண்டுமென உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மறுஉத்தரவு வரை அமலில் இருக்கும் என உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற ஊழியர்கள் இருபிரிவாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் ஒவ்வொரு பிரிவுக்கும் இரண்டு நாள் பணி தரப்படும் என தனபால் தெரிவித்துள்ளார்.