#IPL2021: கடும் சிக்கலில் ராஜஸ்தான் ராயல்ஸ்.. மேலும் ஒரு வெளிநாட்டு வீரர் விலகல்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏற்கனவே 3 பேர் விலகியுள்ள நிலையில், தற்பொழுது அந்த அணியின் பந்துவீச்சாளர் ஆண்ரூ டை ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 20 போட்டிகள் முடிவடைந்தது. இதுவரை ஐபிஎல் தொடரில் இருந்து வெளிநாட்டு வீரர்கள் சிலர் விலகியுள்ளார்.
அந்தவகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏற்கனவே 3 பேர் விலகியுள்ள நிலையில், தற்பொழுது அந்த அணியின் பந்துவீச்சாளர் ஆண்ரூ டை ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இவர், கடந்தாண்டு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்றார். தற்பொழுது ராஜஸ்தான் அணியில் பட்லர், மில்லர், மோரிஸ், மற்றும் ரஹ்மான் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் ராஜஸ்தான் அணி, கடும் சிக்கலில் உள்ளது.