வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் – சத்யபிரதாசாகு அறிவிப்பு
வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரேகட்டமாக நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு அறிவித்துள்ளார்.
அதாவது, 72 மணி நேரத்திற்கு முன் முகவர்கள், அதிகாரிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். மே 2-ஆம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது என்றும் 8.30 மணிக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
14 மேஜைகள் வைத்து இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் ஒவ்வொரு மேஜைக்கும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தலைமை அதிகாரி கூறியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.