குஜராத் மருத்துவமனையில் உள்ள ஐ.சி.யு வார்டில் தீ விபத்து -பத்திரமாக மீட்கப்பட்ட 16 கொரோனா நோயாளிகள்!
குஜராத்தில் உள்ள ஆயுஸ் எனும் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியில் உள்ள ஐ.சி.யு வார்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் அங்கிருந்த 16 கொரோனா நோயாளிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் மருத்துவமனைகள் படுக்கை வசதி இல்லாத காரணங்களாலும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் உயிர் இழந்து கொண்டிருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க குஜராத்தில் உள்ள ஆயுஷ் எனும் மருத்துவமனையில் உள்ள ஐந்தாவது மாடியில் நேற்று இரவு 11.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த ஐந்தாவது மாடியில் ஐ.சி.யு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 16 கொரோனா நோயாளிகள் இருந்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் உள்ளிருந்த நோயாளிகளை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி உள்ளனர்.