BREAKING: டெல்லியில் அனைவருக்கும் தடுப்பூசி இலவசம்- கெஜ்ரிவால் அறிவிப்பு ..!

அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தற்போது பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை இது போன்ற பல புகார்கள் எழுந்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில், கொரோனாவை கட்டுப்படுத்த மே 1 முதல் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், டெல்லி மாநிலத்தில 18 -க்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி மாநிலமும் உள்ளது. இதற்கு முன் தமிழகம், உத்தரபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.