மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஆடி கார்களுக்கு போட்டியாக புதிய வடிவில் களமிறங்கும் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவி(BMW X3 SUV)..!

Default Image

 

புதிய அம்சங்களுடன்  பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவி(BMW X3 SUV) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 2003ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவி சொகுசு கார் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்று.

உலக அளவில் 15 லட்சம் யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மூன்றாம் தலைமுறை மாடலாக 2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

எக்ஸ்ட்ரைவ் 20டீ எக்ஸ்படீஷன் மற்றும் எக்ஸ்ட்ரைவ் 20டீ லக்சுரி லைன் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவியில் ஹெட்லைட், டெயில் லைட்டுகளின் டிசைன் முற்றிலுமாக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

மொத்தத்தில் பேபி எக்ஸ்5 எஸ்யூவி போல தோற்றத்தில் மாறி வந்துள்ளது. புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவியில் 18 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. விருப்பத்தின் அடிப்படையில் 21 அங்குல அலாய் வீல்களை தேர்வு செய்யும் வாய்ப்பையும் பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்குகிறது. பின்புறத்தில் ரியர் ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு புகைப்போக்கி குழல்கள் முக்கிய சிறப்பம்சம். எல்இடி விளக்குகள் கொண்ட டெயில் லைட்டுகள் இடம்பெற்று இருக்கின்றன.

இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்று இருக்கிறது. கெஸ்ச்சர் கன்ட்ரோல் எனப்படும் கை அசைவுகள் மூலமாக கட்டுப்படுத்தலாம். சென்டர் கன்சோல் மேல் புறத்தில் திரை பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றை இதன் இன்ஃபோடெயின்மென்ட் சப்போர்ட் செய்யும். வாய்ஸ் கன்ட்ரோல் முறையிலும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை இயக்கலாம்.

இந்த புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 காரின் வீல் பேஸ் 60மிமீ அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், உட்புறத்தில் இடவசதி வெகுவாக மேம்பட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மற்றும் 7 சீரிஸ் சொகுசு செடான் கார்களுக்கு இணையாக உட்புறத்தில் உதிரிபாகங்களின் தரம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இது நிச்சயம் கூடுதல் மதிப்பை தரும் விஷயமாக இருக்கும். பின் இருக்கையில் உள்ள பயணிகளுக்கு பிரத்யேக க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் உள்ளது. பின் இருக்கையை 40:20:40 என்ற விகிதத்தில் மடக்கி விரிக்கும் வசதியும் உள்ளது. இருக்கையை மடக்கி வைத்து பூட் ரூம் இடவசதியை அதிகரிக்க முடியும்.

இந்த காரில் 550 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை தரும் விஷயமாக பார்க்க முடியும். புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவியில் இருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இசட்எஃப் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரோனிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் 0 – 100 கிமீ வேகத்தை 8 வினாடிகளில் எட்டிவிடும்.

மணிக்கு 213 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. இதுதவிர, சக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சின் ஆப்ஷனும், பெட்ரோல் எஞ்சினும் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்ப்பட்டு இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவியில் ரூ.49.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி மற்றும் ஆடி க்யூ5 ஆகிய மாடல்களுடன் போட்டி போடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

rain news live
puducherry rain school leave
world chess championship D'Gukesh
Chengalpattu
CM Stalin
tn school leave rain
Shiv sena Leader Eknath Shinde