லண்டனிலும் கடனா.? விஜய் மல்லையாவின் தொடரும் லீலைகள்..!

Default Image

 

இந்தியாவில் ரூ 9,000 கோடியை ஏமாற்றி வெளிநாடு சென்ற விஜய் மல்லையா, அங்கும் தனது திருட்டு வேலையை காட்ட துவங்கிவிட்டார். தனக்கு கார் வாங்க கடன் வழங்க கோரி வங்கியில் விண்ணப்பித்த நிலையில் அவரக்கு கடன் மறுக்கப்பட்டது.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களின் ஒருவராக இருந்த விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் இருந்து சுமார் ரூ9000 கோடி ரூபாய் கடன் பெற்று விட்டு வெளிநாடு தப்பிவிட்டார். இவரை பிடிப்பது குறித்து லண்டன் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில் லண்டனிலும் மல்லையா கடன் வாங்க முயற்சித்த ஒரு சுவரஸ்யமான விஷயம் வெளியாகியுள்ளது. இது மல்லையா குறித்த பரபரப்பை மீண்டும் கிளப்பியுள்ளது.

மல்லையா கிங்க்பிஷர் என்ற விமான நிறுவனத்தையே சொந்தமாக வைத்திருந்தவர் இவரிடம் உள்ள மோட்டார் உலகத்தை பற்றி நமக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை. நீங்கள் கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாத வாகனங்கள் எல்லாம் அவரிடம் இந்தது.

மல்லையாவிடம் இருந்த கார்கள், விமானங்கள், தனி சொகுசு ஜெட் விமானம் என எல்லாம் இப்பொழுது ஏலம் விடப்பட்டு வருகின்றனர். இப்படியாக மல்லையாவின் இந்தியா சொத்துக்கள் எல்லாம் பறிபோய் வரும் நிலையில் லண்டனில் புதிதாக கார்களை வாங்க எண்ணியுள்ளார் மல்லையா.

இவருக்கு லண்டனிலும் பல சொத்துக்கள் இருந்தாலும் அதை இந்திய அதிகாரிகளால் பறிமுதல் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். இதை பயன்படுத்திக்கொள்ள யூகித்த மல்லையா லண்டனில் உள்ள ஒரு வங்கியில் ரூ 4.03 கோடி மதிப்பிலான பெராரி காரை வாங்க கடன் கோரி விண்ணப்பபித்துள்ளார்.

ஆனால் அந்த வங்கி உங்கள் மீது இந்தியாவில் கடனை திரும்பி தராததாக வங்கிகள் புகார் உள்ளது. மேலும் ஊடகங்களில் உங்களை பற்றி தவறான செய்தி வருகிறது இதனால் எங்களால் கடன் வழக்க முடியாது என அவரது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.

அவரது லண்டனில் உள்ள தனக்கு தெரிந்தஒருவரின் பெயரில் கடன் விண்ணப்பித்து கடனை பெற்றதாகவும். அந்த பணம் மூலம் வாங்கப்பட்ட காரை தற்போது மல்லையா பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த கடனுக்கான மாத தவனை தொகையை கடனை வாங்கியவரின் வங்கி கணக்கு மூலம் மல்லையாவே கட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக மல்லையா கடன் வாங்கியவர் வங்கி கணக்கில் ரூ 1.3 கோடி ரூபாய் செலுத்தியுள்ளதாகவும் கூறுப்படுகிறது. இந்த தகவல் லண்டன் கோர்ட்டில் மல்லையாவின் விவகாரம் விசாரணைக்கு வந்த போது அவரது வக்கீல் அளித்த தகவல் அளிப்படையில் வெளியுலகிற்கு தெரியவந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்