சிக்ஸர் மழை பொழிந்த ரவீந்திர ஜடேஜா.., பெங்களூருக்கு 192 ரன்கள் இலக்கு ..!

சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 191 ரன்கள் எடுத்தனர்.

ஐபிஎல் தொடரின் இன்றயை போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தனர்.

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் , டு பிளெசிஸ் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலிருந்து அதிரடி ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தினர். இதனால் சிறப்பாக விளையாடி வந்த ருதுராஜ் 4 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசி 33 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து இறங்கி ரெய்னா வந்த வேகத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

14 ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். அப்போது 4 பந்தை சிக்ஸர் அடிக்க முயன்றபோது ரெய்னா 24 ரன்னில் விக்கெட்டை இழந்தார். சிறப்பாக விளையாடி வந்த டு பிளெசிஸ் அரைசதம் விளாசினார். ரெய்னா அவுட் ஆன அடுத்த பந்திலே சிக்ஸர் அடிக்க முயன்று டு பிளெசிஸ் 50 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து இறங்கிய அம்பதி ராயுடு 14 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் இறங்கிய ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடினார். கடைசி ஓவரில் ரவீந்திர ஜடேஜா ஹாட்ரி சிக்ஸர் விளாசினார். இதனால், ரவீந்திர ஜடேஜா 25 பந்தில் அரைசதம் விளாசினார். இப்போட்டியில் கடைசி ஓவரில் மட்டும் 5 சிக்ஸர் , 1 பவுண்டரி, 2 ரன்கள் என மொத்தம் 37 ரன்கள் ரவீந்திர ஜடேஜா அடித்தார்.

கடைசிவரை களத்தில் ஜடேஜா 62*, தோனி 2* ரன்களுடன் களத்தில் நின்றார். இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 191 ரன்கள் எடுத்தனர். 192 ரன்கள் இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கவுள்ளது. பெங்களூர் அணியில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டை பறித்தார்.

author avatar
murugan