சென்னையில் 16,000 காவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி..!

சென்னையில் 16 காவலர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசியபோது, 200 இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 7,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். சென்னையில் உள்ள 23 ஆயிரம் காவலர்களில் 16 காவலர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதற்கு அவகாசம் உள்ளதால் அதற்கேற்ப காவலர்கள் அடுத்த தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள். முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட காவலர்கள் சிலருக்கு கூட தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை ஊரடங்கு விதிகளை மீறிய 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் 3,609 பேர் கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதித்த காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் தற்போது 258 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர். காவலர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை பாதிப்பால் இதுவரை காவல்துறை சார்ந்த 13 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.

author avatar
murugan