கொரோனா 2வது அலை மோசமாக தாக்கியுள்ளது…மூச்சு பயிற்சி செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் – பிரதமர் மோடி

Default Image

பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி சென்றடைய மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும் என பிரதமர் மோடி உரை.

மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா இரண்டாவது அலை நம்மை மிகவும் மோசமாக தாக்கியுள்ளது. கொரோனா முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்து வெளிவந்த நிலையில், 2வது அலை மோசமாக உள்ளது. தொற்று பரவலை மாநில அரசுகள் தங்களால் முடிந்த முயற்சிகள் அனைத்தையும் செய்து வருகின்றனர் என கூறியுள்ளார்.

மிகவும் கடினமான சூழ்நிலையை நாம் சந்தித்து வருகிறோம். கொரோனா 2-வது அலையையும் நாம் வெற்றிகரமாக எதிர்கொள்வோம். இந்த தாக்குதல் நாட்டையே உலுக்கிவிட்டது. கொரோனா 2-வது அலையை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு துறை வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினேன். உலகிலேயே இந்தியாவில்தான் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகிறது என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் உள்ளன. அதை கொடுப்பதில் தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகளுடன் இணைந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி சென்றடைய மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும். கொரோனாவை தடுக்க பொதுமக்கள் மூச்சு பயிற்சி செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். அனைத்து மாநில அரசுகளுக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக மத்திய அரசு வழங்குகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இலவச தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.

மேலும், கொரோனா தாக்குதல் நமது பொறுமை, வேதனையை தாங்கும் சக்தியை சோதித்து கொண்டிருக்கிறது என்றும் கொரோனாவுக்கு எதிரான போரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மிகப் பெரிய பங்களிப்பு செய்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்