ரஜினிகாந்த்தை கார்னர் செய்கிறார்கள், ஏன் என்று தெரியவில்லை நடிகர் ஆனந்தராஜ்.! பகிரங்க போட்டி ..!
இன்று சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியுடன், நடிகர் ஆனந்தராஜ் சந்தித்து அரைமணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
தமிழகம் மீதும், தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவராக ரஜினி
உள்ளார். தமிழகத்தில் இருந்து ரஜினியை பிரித்து பார்ப்பது தவறானது. ரஜினிகாந்த்தை கார்னர் செய்கிறார்கள், ஏன் என்று தெரியவில்லை என கூறியுள்ளார். எதை நோக்கி ரஜினியை குறி வைக்கிறார்கள் என்பது சில நாட்களில் உங்களுக்கே தெரிய வரும்.
கர்நாடகவில் தற்போது இருந்துவரும் அரசியல்சூழலில் காவிரி வாரியம் அமைக்கப்படாது என கருதுகிறேன். இயக்குநர் பாரதிராஜா, ரஜினியை கர்நாடக தூதுவன் என கருத்து சொல்கிறார்; அப்படி என்றால் எதற்காக ரஜினியை வைத்து படம் எடுத்தார்.? ரஜினிகாந்த் நடித்த படத்துக்கு கொடி பறக்குது என பாரதிராஜா தலைப்பு வைத்தது ஏன்? கொடி பறக்குது என்பதற்கு பதில் பரதேசி என பாரதிராஜா பெயர் வைத்திருக்கலாமே? இவ்வாறு அவர் கூறினார்.