ஏப்ரல் 28 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!
ஏப்ரல் 28 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மாவட்ட கடலோர பகுதி வரை நிலவும் வளிமண்டல சுழற்ச்சி காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று முதல் 28ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதைபோல் மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 90 சதவீதம் வரை உள்ளதால் காற்றின் வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக உணரப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.