ஊரடங்கை மீறினால் வாகனங்கள் பறிமுதல்.. காவல் துறை எச்சரிக்கை..!
ஊரடங்கு விதிகளை மீறி சாலைகளில் சுற்றி திரியும் பொதுமக்கள், இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
கொரோனா பரவலின் 2-வது அலை காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முழு ஊரடங்கு என்பதால் ஊரடங்கு விதிகளை மீறி சாலைகளில் சுற்றி திரியும் பொதுமக்கள், இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
மேலும், தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.