இரத்தம் வழங்கம் MBlood என்ற மொபைல் ஆப் …!!

Default Image

 

தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. சரியான நேரத்தில் இடம் அறிந்து தேவையான குருதி வழங்கும் MBlood என்ற மொபைல் ஆப் ஆனது தற்சமயம் மிக அதிகமான பயனர்களை எட்டியுள்ளது.

குறிப்பாக அத்தியாவசிய நேரங்களில் குருதி தேவைப்பவர்களுக்கு அவர்களின் இடம் அறிந்து, அருகில் இருக்கும் குருதி கொடை வழங்குபவர்களை அறிமுகம் செய்துவைக்கிறது இந்த செயலி. மேலும் குறப்பிட்ட நேரத்தில் குருதியினை வழங்கும் சேவையினை MBlood செயலி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருக்கும் SPPLJ Charitable Trust மூலம் இந்த செயலி வழநடத்தப்படுகிறது. மேலும் இந்த செயலியின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டி ரூ.50 லட்சம் வரை நிதி திரட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த செயலியை பயன்படுத்த மிக எளிமையாக இருக்கும்.

மேலும் MBlood நிறுவனத்தின் நிறுவனர் சுஷில் லால்வானி தெரிவித்தது என்னவென்றால் “குருதி வங்கிகளையும், மருத்துவர்களையும், குருதி கொடையாளர்களுடன் இணைப்பதே எங்களின் சிறந்த பணியாகும். அதன்பின்பு அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் தேவையான சேவையினை தரமாக வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும் என்று கூறினார்.

பெயர் பதிவு குறிப்பாக MBlood செயலி மூலம் வழங்கப்படும் இந்த சிறந்த சேவையானது இலவசமான ஒன்றாகும். இந்த செயலியில் குருதி கொடையாளர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும், பின்பு குருதி தேவைப்படுபவர்கள் இவர்களை தொடர்புக்கொள்ள எளிதில் வழி வகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MBlood சேவை பொறுத்தவரை பயனர்களிடம் இருந்து எவ்வித கட்டணங்களையும் வசூலிப்பது இல்லை, மேலும் சரியான நேரத்தில் குருதியை வழங்க உதவுகிறது இந்த செயலி. மேலும் இந்த செயலி ஆனது இதுவரை 27,000 பயனர்களை எட்டியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்