#BREAKING: மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் – மத்திய சுகாதார அமைச்சகம்

Default Image

மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக தரப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசி மாநில அரசுகளுக்கு ஒரு டோஸுக்கு ரூ.400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸுக்கு ரூ.600 என விலை நிர்ணயம் செய்திருந்தது.

இதையடுத்து, ஏன் இலவசமாக தடுப்பூசி வழங்கக்கூடாது என பலவேறு தரப்பில் இருந்து கேள்வி எழுந்த நிலையில், பல்வேறு மாநில அரசுகள் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என தெரிவித்தது. இந்த நிலையில், மாநில அரசுகளுக்கு தடுப்பூசி இலவசமாக தரப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு தடுப்பூசிகள் ரூ.150க்கு கொள்முதல் செய்யப்பட்டு, மாநில அரசுகளுக்கு இலவசமாக தொடர்ந்து வழங்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், மாநில அரசுகள் கொள்முதல் செய்யும் தடுப்பூசிகளுக்கான செலவினத்தை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்