முதல்வர்களுக்கு பாடம் கற்பிக்க நீங்கள் ஒன்றும் தலைமை ஆசிரியர் அல்ல – முன்னாள் முதல்வர் சித்தராமையா!
முதல்வர்களுக்கு பாடம் கற்பிக்க நீங்கள் ஒன்றும் தலைமை ஆசிரியர் அல்ல என பிரதமர் மோடியை விமர்சித்த கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா.
இதுகுறித்து, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடி அவர்களே, எந்த நோக்கமும் இல்லாமல் நீங்கள் மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றினால் வைரஸ் மறைந்துவிடாது என்றும் முதல்வர்களுக்கு பாடம் கற்பிக்க நீங்கள் ஒன்றும் தலைமை ஆசிரியர் அல்ல எனவும் விமர்சித்துள்ளார்.
மாநில அரசுகளின் கோரிக்கைகளை முதலில் நிறைவேற்றுவதன் மூலம் உங்கள் பொறுப்பை காட்டுங்கள் என தெரிவித்துள்ளார். நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா நோயாளிகள் ஆக்ஸிஜன் இல்லாமல் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஆக்ஸிஜனை வழங்க பிரதமர் மோடியிடம் மாநிலங்கள் கோருகையில் பதுக்கல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அவர் மாநிலங்களைக் கேட்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
நம் நாட்டில் பற்றாக்குறை இருக்கும்போது ஏன் ஆக்ஸிஜன் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டியிருந்தது? என கேள்வி எழுப்பியுள்ளார். பெங்களூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்பட்ட கொரோனா படுக்கைகள் 7621. அதில், 6124 படுக்கைகள் நிரம்பி வழிகிறது. மீதம் 1487 படுக்கைகள் உள்ள நிலையில், தினமும் 15,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என விளக்கியுள்ளார்.
மேலும், பெங்களூரில் 65% சாதாரண படுக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதிக வசதி படுக்கைகளில் 96% ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 98% ஐ.சி.யூ படுக்கைகள் மற்றும் 97% வென்டிலேட்டர் படுக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. புதிதாக பாதிக்கப்படும் நோயாளிகள் எங்கே செல்வார்கள், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், நிலைமை கைமீறி சென்றுவிட்டது என்று கர்நாடக முதல்வர் ஒப்புக் கொண்டார். ஆகையால், மக்களுக்கு தீர்வு தேவை என்றும் அத்தகைய திறமையற்ற முதல்வருடன் கொரோனா நெருக்கடியை பிரதமர் மோடி எவ்வாறு தீர்ப்பார்? என முன்னாள் முதல்வர் சித்தராமையா கடுமையாக சாடியுள்ளார்.
Mr. @PMOIndia @narendramodi,
Virus will not vanish if you repeatedly appear on television without any purpose,
And also you are not an headmaster to teach lessons to CMs,
First show your responsibility by fulfilling the requests placed by State govts.
1/5
PMwithCMs— Siddaramaiah (@siddaramaiah) April 23, 2021