மும்பையை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முன்னேறிய பஞ்சாப்..!
பஞ்சாப் அணி 17.4 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்று ஐபிஎல் தொடரின் 17 வது லீக் போட்டியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை அணியும், பஞ்சாப் அணியும் சென்னை சேப்பாக் மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய மும்பை அணி தொடக்கமே சிறப்பாக அமையவில்லை இதனால், மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்தனர். மும்பை அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 63, சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் எடுத்தனர். 132 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.
பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 4 பவுண்டரி , 1 சிக்ஸர் விளாசி 25 ரன்னில் வெளியேறினார். இவர்கள் கூட்டணியில் 53 ரன்கள் எடுக்கப்பட்டது. அடுத்து இறங்கிய கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல் உடன் சேர்ந்து நிதானமாக ரன்கள் சேர்த்தனர்.
இறுதியாக பஞ்சாப் அணி 17.4 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய கே.எல்.ராகுல் அரைசதம் விளாசி கடைசிவரை களத்தில் 60* , கிறிஸ் கெய்ல் 43* ரன்களுடன் நின்றனர்.
பஞ்சாப் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 2 போட்டியில் வெற்றியும், 3 போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது. மும்பை அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் தோல்வியும் ,2 போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது.