தடுமாறிய மும்பை..! பஞ்சாபிற்கு 132 ரன் இலக்கு..!
மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்தனர்.
இன்று ஐபிஎல் தொடரின் 17 வது லீக் போட்டியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை அணியும், பஞ்சாப் அணியும் சென்னை சேப்பாக் மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து,மும்பை அணியில் தொடக்க வீரராக குயின்டன் டி கோக் , ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே குயின்டன் டி கோக் 3 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் 6 ரன்களில் வெளியேற மும்பை அணி 26 அணி 2 விக்கெட்டை பறிகொடுத்து இருந்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய பின்னர் சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா உடன் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர்.
அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா அரைசதம் விளாசினார். சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 33 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் ரோகித் சர்மா 63 தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய ஹார்திக் பாண்டியா 1, க்ருனல் பாண்டியா 3 ரன்கள் எடுத்து வெளியேறினர்.
இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்தனர். 132 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கவுள்ளது.