அம்பானிக்கு குட்(Good) நியூஸ்..! நமக்கு பேடு(Bad) நியூஸ்..!

Default Image

 

இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனங்களின் டவுன்லோட் மற்றும் அப்லோட் வேகத்தினை மற்றும் தரத்தினை பரிசோதிக்கும் ஓப்பன்சிக்னல், 2018-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாத ஸ்பீட் டெஸ்ட் அறிக்கையை “ஸ்டேட் ஆப் மொபைல் நெட்வெர்க்ஸ் : இந்தியா (ஏப்ரல் 2018)” என்கிற பெயரின் கீழ் வெளியிட்டுள்ளது.

வெளியான அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைமையை தாங்கும் முகேஷ் அம்பானிக்கு ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது. மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கோ ஒரு மோசமாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

ஓப்பன்சிக்னல் வெளியிட்டுள்ள அறிக்கையானது, இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 4ஜி சேவைகளில் அதிக வேகத்தை உட்செலுத்துவதற்கு பதிலாக, அவைகளின் எல்டிஇ வீச்சை அதிகரிக்கும் வேலைகளில் தான் அதிக கவனம் செலுத்துகின்றன என்று கூறுகிறது.

கடந்த சில மாதங்களில், ஒவ்வொரு இந்திய டெலிகாம் ஆப்ரேட்டரும் (பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார்) அதன் 4ஜி கிடைக்கும் தன்மையை அதிகரித்துள்ளன. சில நிறுவனங்கள் 65% எல்டிஇ கிடைப்பதற்கான நுழைவாயில்களை கடந்து விட்ட நிலைப்பாட்டில், அவைகளில் சில இப்போது 70% என்கிற புள்ளியை நோக்கி பயணிக்கின்றன.

 அதாவது ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி நெட்வெர்க்கின் திறன் (அதாவது கிடைக்கும் தன்மை) விரிவடைந்து விட்டது. ஆனால் ஜியோவின் 4ஜி வேகமானதோ குறைந்துவிட்டது – இதுதான் ஜியோ வாசிகளான நமக்கு கிடைத்த பேட் நியூஸ்.

ஓப்பன்சிக்னல் வெளியிட்டுள்ள ஸ்பீட் டெஸ்டில் அறிக்கையின் படி, ரிலையன்ஸ் ஜியோ, வெறும் 5.13 Mbps என்கிற சராசரி 4ஜி பதிவிறக்க வேகத்தை மட்டுமே பதிவு செய்துள்ளது. மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனமானதோ 9.31 Mbps என்கிற சராசரி 4ஜி பதிவிறக்க வேகத்தை பதிவு செய்துள்ளது. இது ஜியோவை விட சரியாக 4 Mbps அதிகமாகும்.

இரண்டாம் இடத்தில் இருப்பது ஐடியா செல்லுலார் நிறுவனம் ஆகும், அது 7.27 Mbps என்கிற சராசரி 4ஜி பதிவிறக்க வேகத்தை பதிவு செய்துள்ளது. அதற்கு அடுத்ததாக, 6.98 Mbps என்கிற வேகத்தை பதிவு செய்து வோடபோன் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. ஆம், ஜியோவிற்கு கடைசி இடம்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்