மீண்டும் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல்..!
முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி தொடர்பான ஒரு வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார். தடுப்பூசி பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்டு உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரியும் மன்சூர் அலிகான் மனு தாக்கல். சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விவேக் மரணத்தை அடுத்து பேசிய மன்சூர் அலிகான் கொரோன தடுப்பு நடவடிக்கைகளை விமர்சித்திருந்தார். அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மன்சூர் அலிகான் பேச்சு எதிராக இருப்பதாக மருத்துவ அலுவலர் பூபேஸ் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து தொற்று நோயைப் பரப்பும் தீய எண்ணத்துடன் நடப்பது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மன்சூர் அலி கான் மீது வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஏற்கனவே முன்ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.