#BREAKING : கொரோனா சிகிச்சைக்கு “virafin” மருந்திற்கு ஒப்புதல் ..!
கொரோனா சிகிச்சைக்கு ஸைடஸ் நிறுவனத்தின் (virafin) விராஃபின் மருந்தை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு விராஃபின் மருந்தை பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. மருந்து எடுத்துக் கொண்ட 7 நாட்களில் பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் கொரோனா நெகட்டிவ் என இருந்தது என்று கூறப்படுகிறது.
இந்த பரிசோதனை 91.15 சதவீத நோயாளிகளுக்கு நடத்தப்பட்டுள்ளது. இந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்ட லேசான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஸைடஸ் நிறுவனம் கூறுகிறது. 91.15 சதவிகிதம் மருந்துகளின் முடிவுகள் மருத்துவ பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த முடிவுகள் சரியான நேரத்தில் மருந்தைக் கொடுப்பது நோயாளிகளுக்கு விரைவாக குணமடையவும், நோயின் மேம்பட்ட கட்டங்களில் காணப்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும் உதவும் என கூறப்படுகிறது. இந்தியாவில் 20-25 மையங்களில் 250 நோயாளிகளுக்கு மூன்றாம் கட்ட மனித பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் விரிவான முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று ஸைடஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ஸைடஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நோயின் ஆரம்பத்தில் இந்த மருந்தை பயன்படுத்தினால் நோயாளிகள் விரைவாக குணமடைய இந்த மருந்து உதவும் என்று கூறப்பட்டுள்ளது.