சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஸ் யெச்சூரி மரணம்…! ட்வீட்டரில் கிண்டலாக பதிவிட்ட பாஜக தலைவர்…!
சீனாவின் ஆதரவாளர் சிபிஐஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் யெச்சூரி சீன கொரோனா காரணமாக காலமானார்.
சிபிஐஎம் தலைவர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஸ் யெச்சூரி வியாழக்கிழமை அன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இவரது மரணம் அரசியல் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இவரது மரணத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் பாஜக தலைவர் மிதிலேஷ் திவாரி அவர்கள், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘சீனாவின் ஆதரவாளர் சிபிஐஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் யெச்சூரி சீன கொரோனா காரணமாக காலமானார் என்று பதிவிட்டிருந்தார்.
இவரது பதிவு மற்ற அரசியல் பிரபலங்கள் மத்தியில், சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், என்.சி.யின் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இதற்கு மற்ற சில அரசியல் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
It takes a special category of ___________ to gloat over the death of a person’s son. You can always rely on someone in the BJP to set the bar so low that a snake wouldn’t be able to slither under it. pic.twitter.com/t1wtbCjxna
— Omar Abdullah (@OmarAbdullah) April 22, 2021