#IPL2021: கொரோனாவில் இருந்து மீண்டு, மீண்டும் அணியுடன் இணைந்த அக்சர் படேல்!
ஐபிஎல் தோடன்றில் டெல்லி அணி சார்பாக விளையாடும் ஆல்-ரவுண்டர் அக்சர் படேல்க்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்பொழுது அவர் குணமடைந்து, மீண்டும் அணியுடன் இணைந்தார்.
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வலம் வருபவர், அக்சர் படேல். ஐபிஎல் தொடர் தொடங்கும் முன் இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில்,அவருக்கு ஏப்ரல் 3-ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவருவதற்காக சிகிச்சை பெற்று வந்தார். அவர் இல்லாத நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 4 போட்டிகள் விளையாடியது. அதில் 3 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. தற்பொழுது அக்சர் படேல் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து, மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார்.
மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் படிக்கல்க்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் தொற்றிலிருந்து மீண்டு, நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடி, சதம் அடித்தார். அதேபோல அக்சர் படேலும் அதிரடியாக ஆடுவார் என்ற ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.