#BREAKING: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு..!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக பல மருத்துவமனைகளில் தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், ஸ்டெர்லைட்டில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தில் நாள் ஒன்றுக்கு 500 டன் ஆக்சிஜன் தயாரிக்க முடியும். எனவே இடை காலம் ஆக்சிஜன் தயாரிப்புக்கு ஆலை இயங்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று மத்திய அரசு வழக்கறிஞர் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேதாந்தா நிறுவனத்தின் ஆலையை திறப்பதற்கு பதிலாக நாடு முழுவதிலும் உள்ள மற்ற ஆலைகளில் இருந்து ஆக்சிஜனை உற்பத்தி செய்ய மத்திய அரசு கவனம் செலுத்தலாம். ஆலையத் திறப்பது சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு வழி வகுக்கும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.