விவசாயிகளுக்காக வந்துவிட்டது புதிய அப்..! ‘நாகா பார்ம் டாக்டர்'(NagaFarm Doctor)..!

Default Image

 

நாகலாந்து மாநில அரசின் சம்பீத்திய செயல்பாடானது,  எல்லாம் நாம் கனவில் கூட நினைத்து பார்க்க கூடாது என்கிற கோபத்தையும் ஒருசேர கிளப்பி விடுகிறது.

விவசாயிகளும், அவர்களுக்கான விவசாயமும் எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு செயல் மூலம் நாட்டிற்கே அறிவித்துள்ளது.

நாகா பார்ம் டாக்டர்(NagaFarm Doctor)  நாகாலாந்தின் வேளாண் மற்றும் ஒத்துழைப்பு துரையின் அமைச்சர் ஆன ஜி.கெய்டோ ஆய், நேற்று (ஏப்ரல் 17 ஆம் தேதி) தன் மாநிலத்தின் விவசாயிகளுக்கு ‘நாகா பார்ம் டாக்டர்’ என்கிற பெயரிலான ஆண்ட்ராய்டு மொபைல் ஆப் ஒன்றை அறிமுகம் செய்தார்.

கூகுள் பிளே ஸ்டோரில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின்படி, நாகலாந்து மாநிலத்தின் மின்-ஆளுமைச் சங்கத்தின் (NSeGS) உள்நாட்டு பயன்பாட்டால் உருவாக்கப்பட்ட இந்த ஆண்ட்ராய்டு ஆப் ஆனது, கடந்த மார்ச் 26 அன்று முதல் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது.

நாகா பார்ம் டாக்டர் ஆப்பில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தின் படி இது நாகலாந்தின் உள்ளூர் விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, வேளாண் உற்பத்தி தொடர்பான நோய்கள் / பூச்சிகள் போன்ற பிரச்சினைகளை நிர்வகிக்கவும், அவற்றை அடையாளம் காணவும் இந்த ஆப் உதவும்.

தற்போது வரையிலாக, நோய்கள் மற்றும் பூச்சிகளின் படங்கள் உட்பட அரிசி, மக்காச்சோளம், தக்காளி, மிளகாய், வாழை, சிட்ரஸ் உட்பட 19 வகைப்படுத்தப்பட்ட காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றின் தகவல்களை நாகா பார்ம் டாக்டர் ஆப் தன்னுள் கொண்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட பயிர் அல்லது தாவரத்தை தாக்கும் பல்வேறு நோய்கள் மற்றும் பூச்சிகளை, நாகலாந்தின் உள்ளூர் விவசாயிகளால் அடையாளம் காண முடியும். இது தவிர, விவசாயிகள் தங்களுக்கு எழும் சந்தேகங்களை – புகைப்படம் எடுத்து பதிவு செய்துகூட (அதாவது வாட்ஸ்ஆப்பில் போட்டோ ஷேர் செய்வது போல) – கேட்கலாம் என்பதும், அவைகளுக்கு ‘நிபுணர்களால்’ பதில் அளிக்கப்படும் என்பதும் இந்த ஆப்பின் கூடுதல் சிறப்பு. ஒரே ஒரு குறைபாடு என்னவெர்னில் இந்த ஆப் இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.

இந்த நாகா பார்ம் டாக்டர் ஆப் ஆனது வாட்ஸ்ஆப்பை போன்றே ஒரு செயின் கம்யூனிகேஷன் அம்சத்தினை கொண்டுள்ளதால், விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக மற்றும் யூஸர் பிரண்ட்லியாக உள்ளது.

1. கூகுள் பிளே சென்று NagaFarm Doctor ஆப்பை தேடவும்

2. பின்னர் ஆப்பை டவுன்லோட் செய்து, இன்ஸ்டாப்லஸ்ஸ் செய்யவும்.

3. இன்ஸ்டால் செய்யப்பட்ட பின்னர், “ஒடிபி (OTP) ஒன்றை உருவாக்க, உங்களின் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்.

4. ஒடிபி-ஐ பதிவிட்ட பின்னர், ஆப்பை செயல்படுத்தப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்