சென்னையில் கொள்ளையனை விரட்டிப் பிடித்த சிறுவனுக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டு!

Default Image

நோயாளி போல வந்த நபர் ஒருவர், சென்னை அண்ணாநகர் டி பிளாக் பகுதியை சேர்ந்த மருத்துவரான அமுதாவின் கிளினிக்கிற்கு , தனக்கு உடல் நிலை சரியில்லை என கூறியுள்ளார். அவரை பரிசோதிக்க மருத்துவர் அமுதா முயன்ற போது, திடீரென அவரது கழுத்தில் இருந்த 10 சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினான். கிளிக்கில் இருந்த வெளியில் ஓடி வந்து கூச்சலிட சாலையில் சென்றவர்கள் யாரும் தப்பியோடிய கொள்ளையனை பிடிக்க முயலவில்லை.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சிறுவன் சூர்யா மட்டும் துணிச்சலாக விரட்டிச் சென்று கொள்ளையனை கீழே தள்ளி பிடித்துள்ளார். பின்னர் அவரது சகோதரர் உதவியுடன் அந்த நபரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் கண்டிகையை சேர்ந்த ஜானகிராமன் என்ற அந்த செயின் பறிப்பு கொள்ளையனை கைது செய்து
10 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

இதனிடையே, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் ஜெயராமன், தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன் உள்ளிட்ட உயரதிகாரிகள் சிறுவன் சூர்யாவை நேரில் அழைத்துப் பாராட்டினர். சிறுவனுக்கு காவல் ஆணையர் விஸ்வநாதன் வெகுமதியளித்தார்.

தைரியமாக குற்றவாளிகளைப் பிடிக்க பொதுமக்களும் முன்வந்தால் குற்றங்கள் தடுக்கப்படும் என காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறினார். குற்றவாளிகளைப் பிடிக்க உதவும் பொதுமக்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சிறுவன் சூர்யா, தாம் சென்னை சிறுவர்களுக்கு ஒரு உதாரணம் என அடையாளப் படுத்திக் கொண்டார்.  குற்றங்களின் போது யாரும் வேடிக்கை பார்க்காமல் விறுவிறுப்பாக விரட்டிப் பிடிக்க கேட்டுக் கொண்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்