கொளத்தூர் தொகுதியில் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கிய ஸ்டாலின்..!

Default Image

கொளத்தூர் தொகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழகத்தில் தேர்தல் கடந்த 6-ஆம் தேதி முடிந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், திமுக சார்பில் கோடை காலத்தில் மக்களின் தாக்கத்தை தணிக்க தண்ணீர்பந்தல் அமைக்கவும், கொரோனாவின் 2-வது அலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கபசுரக் குடிநீர், முகக்கவசம், சானிடைசர் போன்றவற்றை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் என அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

ஆனால், வருகின்ற மே 2-ஆம் தேதி வரை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் நீடிப்பதால் நிவாரண பொருட்களை வழங்குவதற்கு தேர்தல் ஆணையத்திடம் திமுக தரப்பில் அனுமதி கேட்டது. மக்கள் நலன் சார்ந்த திமுகவின் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், அச்சம் தவிர்ப்போம் , அறிவியலால் வெல்வோம் என்ற பெயரில் சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக்கவசம், சானிடைசர் மற்றும் சோப்புகள் ஆகியவற்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
Thiruvallur Home Guard Job Vacuncies
Actor Allu Arjun - Telangana CM Revanth reddy
Union minister Nirmala Sitharaman
High Rise Residential Building in Kazan
Thaipoosam (1)
Vittalkumar murder case - Bala Sait and Dharani kumar arrested